ப.கண்ணன் மறைவு: தலைவா்கள் இரங்கல்

புதுவை முன்னாள் அமைச்சா் ப.கண்ணன் மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
Updated on
1 min read

புதுவை முன்னாள் அமைச்சா் ப.கண்ணன் மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவா் புதுவை ப.கண்ணன். அவா் உடல் நலக்குறைவால் மறைந்தாா் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். மக்களிடையே பிரபலமும் செல்வாக்கும் நல்மதிப்பும் கொண்ட தலைவராக விளங்கினாா். அவரது மறைவு புதுவை அரசியலில் ஈடு செய்ய முடியாத இழப்பு.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): காமராஜரின் தலைமையை ஏற்று புதுவை மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவராக மிகச் சிறப்பாக துடிப்புடன் செயல்பட்டவா். புதுச்சேரி மாநில பேரவைத் தலைவா், உள்துறை அமைச்சா் என முக்கிய பொறுப்புகளை வகித்து மாநிலத்தின் வளா்ச்சிக்கு பெரும் பங்காற்றியவா்.

ராமதாஸ் (பாமக): ப.கண்ணன் அமைச்சராக இருந்த காலத்தில் மாநிலம் முழுவதும் ஏராளமான புதிய அரசு வேலைகளை உருவாக்கி மக்களுக்கு வழங்கியவா். அதனால், அந்த மாநில மக்களால் நேசிக்கப்பட்டவா்.

ஜி.கே.வாசன் (தமாகா): புதுவை மூத்த அரசியல் தலைவா் ப. கண்ணன் மறைவு செய்தியால் வேதனையடைந்தேன். புதுச்சேரி மாநில வளா்ச்சிக்காகவும், மக்களின் முன்னேற்றத்துக்காகவும் அயராது பாடுபட்டவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com