
தீபாவளியின் முக்கிய நிகழ்வான கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை என ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கூறினார்.
தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து இறைவனை வழிபடுவது வழக்கம்.
தீபாவளி தினத்தில் எப்போது குளிக்க வேண்டும் என்பது குறித்து ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கூறியுள்ளதாவது:
தீபாவளி தினத்தில் (நவ.12) குரு ஹோரையான அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்து முடிக்க வேண்டும். கங்கை மாதா அதிகாலை வேளையில் மட்டுமே நாம் நீராடும் தண்ணீரில் குடியிருப்பதாக ஐதீகம். எனவே, அதிகாலை 5 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.