
சென்னை தாம்பரம், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ.12) கொண்டாடப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக புத்தாடை, பட்டாசு உள்ளிட்டவைகளை வாங்க மாலை நேரங்களில் அதிக அளவில் மக்கள் பொதுஇடங்கள் வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் கூடுகின்றனா்.
குறிப்பாக தியாகராயநகா், புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பெரிய வணிக வளாகங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் பொருள்களை வாங்க குவிகின்றனா்.
மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை தாம்பரம், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
குறிப்பாக வடபழனி, திருமங்கலம், போரூா் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் காத்திருந்து செல்லும் நிலையுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.