கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சண்முகநாதர் கோயிலில் காப்பு கட்டிய பெண் பக்தர்கள்.
கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சண்முகநாதர் கோயிலில் காப்பு கட்டிய பெண் பக்தர்கள்.

கம்பம், கூடலூர் பகுதிகளில் கந்தசஷ்டி: காப்பு கட்டி விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திங்கள்கிழமை தொடங்கியது. 

கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சண்முகநாதர், சுருளி வேலப்பர் சுப்பிரமணியசாமி, கூடலூர் கூடல் சுந்தரவேலவர் மற்றும் லோயர்கேம்ப்பில் உள்ள வழிவிடுமுருகன் ஆகிய கோயில்களில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு ஷஷ்டி விரதத்தை தொடங்கினர். 

வரும் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு பூஜையும், சனிக்கிழமை காலை பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பக்தர்கள் வருகின்றனர். மாலையில்  சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com