திமுக தனது செல்வாக்கை இழக்கிறது: பாஜக

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு பாஜக உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
வெளிநடப்பு செய்த பிறகு பாஜக உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பு
வெளிநடப்பு செய்த பிறகு பாஜக உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பு

திமுக அரசு தனது செல்வாக்கை இழந்துகொண்டே இருப்பதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு பாஜக உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், 

உயர்கல்வியில் தமிழகத்துக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து தரக்குறைவாக பேசுகின்றனர். இது வருந்தத்தக்கது. வேதனைக்குரியது.

திமுக தன்னுடைய செல்வாக்கை இழந்துகொண்டே செல்கிறது. சிறப்புக் கூட்டத்துக்கான அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. 

தமிழகத்தில் மக்கள் பிரச்னை ஏராளம் உள்ளது. மின்கட்டண உயர்வு அதிகரித்துள்ளது. வீட்டு வரி உயர்வு 100 மடங்கு கூடியுள்ளது. 

இவை அனைத்தும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். பட்டியலின மக்களுக்கு தாக்குதலும் அச்சுறுத்தலும் அதிகரிக்கிறது. இதை மறைப்பதற்காக ஆளுநர் விவகாரத்தை கையில் எடுக்கிறது திமுக. 

வேந்தர் பதவியில் முதல்வர்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். இவை அவசியம்தானா? நாட்டில் வேறு பிரச்னைகள் இல்லையா? மக்கள் பிரச்னையை மையப்படுத்தாமல், ஆளுநரின் நடவடிக்கையை மையப்படுத்துகின்றனர் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com