
வாழப்பாடி: வாழப்பாடி அரசு கிளை நூலக நூலகருக்கு மாவட்ட அளவில் சிறந்த நல் நூலகர் விருதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள கொட்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சே.கதிர்வேல். 1999-இல் பகுதிநேர நூலகர் பணியில் சேர்ந்த இவர், 2006-ஆம் ஆண்டு முதல் முழுநேர நூலகராக பணிபுரிந்து வருகிறார்.
ஏத்தாப்பூர் அரசு கிளை நூலகத்தில் 10 ஆண்டு பணிபுரிந்த இவர், 2017 -ஆம் ஆண்டிலிருந்து, தொடர்ந்து 7 ஆண்டுகளாக வாழப்பாடி அரசு கிளை நூலகத்தில் 3-ஆம் நிலை நூலகராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது நூலகம் சார்ந்த சேவையை பாராட்டி, சேலம் மாவட்ட அளவில் 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலகருக்கான, டாக்டர். எஸ்.ஆர், அரங்கநாதன் 'நல் நூலகர்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
சீர்காழியில் இன்று(நவ.20) நடைபெற்ற அரசு விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, வாழப்பாடி கிளை நூலகர் கதிர்வேலுக்கு டாக்டர். எஸ்.ஆர் அரங்கநாதன் பெயரில் அரசு வழங்கும் 'நல் நூலகர்' விருது வழங்கினார்.
விருது பெற்ற நூலகர் கதிர்வேலுக்கு, வாழப்பாடி நூலகர் வாசகர் வட்டத் தலைவர் வரதராஜன், துணைத் தலைவர் கவிஞர் மன்னன் மற்றும் இலக்கியப் பேரவை, உலகத் தமிழ்க் கழகம் நிர்வாகிகள், எழுத்தாளர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.