வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை தடுத்து நிறுத்திய பூனை: செல்லப்பிராணியின் நெகிழ்ச்சி வைரல்!

கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை தடுத்து நிறுத்திய செல்லப்பிராணியான பூனையின் நெகிழ்ச்சி செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
பூனையும் பாம்பும் ஒன்றுக்கொன்று அசையாமல் பார்த்துக்கொள்ளும் காட்சி
பூனையும் பாம்பும் ஒன்றுக்கொன்று அசையாமல் பார்த்துக்கொள்ளும் காட்சி


கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை தடுத்து நிறுத்திய செல்லப்பிராணியான பூனையின் நெகிழ்ச்சி செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் இருந்து வீட்டின் படிக்கட்டுக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பாம்பு படிக்கட்டில் ஏறி வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணியான பூனை, பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தியது. 

பூனையின் சீறலை அறிந்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் கதவை மூடியதுடன், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சார்ந்த பாம்பு பிடி வீரர் ஒருவருக்கு தகவல் அளித்தனர்.  

தகவலையடுத்து விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்றார்.

வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த செல்லப்பிராணியான பூனை, வீட்டிற்குள் பாம்பு நுழைவதை தடுத்து நிறுத்தியதுடன், பாம்பும் பூனையும் ஒன்றுக்கொன்று 15 நிமிடம் அசையாமல் பார்த்துக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக, பூனை மற்றும் பாம்பு ஒன்றுக்கொன்று அசையாமல் பார்த்துக்கொள்ளும் காட்சியை நெகிழ்ச்சிக்குரிய விஷயமாக பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com