சென்னையில் தொடர் மழை... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புதன் மற்றும் வியாழக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புதன் மற்றும் வியாழக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதன்கிழமை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை (நவ.23) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.  தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை(நவ.24) வரை அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

புதன்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையில் அம்பத்தூர், ஆவடி, வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com