உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளுநர் ஆர்.என். ரவி படிக்க வேண்டும்: ப.சிதம்பரம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என். ரவி படிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளுநர் ஆர்.என். ரவி படிக்க வேண்டும்: ப.சிதம்பரம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என். ரவி படிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2020 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்கள், மாநில ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.

சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைப்பது, தினசரி கோப்புகள், நியமன உத்தரவுகள், சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு உத்தரவுகளில் கையொப்பமிடாதது, மக்கள் பிரதிநிதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்காதது போன்ற நடவடிக்கைகளால் மாநில அரசு நிா்வாகம் முடங்கும் வகையில் ஆளுநா் செயல்படுகிறாா். மேலும், அவா் மாநில அரசுடன் ஒத்துழைக்காமல் விரோத மனப்பான்மையை உருவாக்குகிறாா்.

அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்காத அவரின் செயல்பாட்டை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அத்துடன் மசோதாக்கள், அரசு உத்தரவுகள் மீது ஆளுநா் முடிவு எடுக்க கால வரம்பை நிா்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, மசோதாக்களைப் பொருத்தவரை, நவ.10-ஆம் தேதி பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக இதேபோன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பின்னா், தமிழக ஆளுநா் மாநில அரசுக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் அந்த மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருந்துள்ளன. 3 ஆண்டுகளாக அவா் என்ன செய்துகொண்டிருந்தாா். ஆளுநா் அலுவலகம் முறைப்படி செயல்படுகிறதா? கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, தற்போதைய விவகாரம் என்பது எந்த ஆளுநா் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதித்தாா் என்பது பற்றியது அல்ல. பொதுவாகவே அரசமைப்புச் சட்ட கடமையின்படி, ஆளுநா் அலுவலகம் செயல்படுகிறதா? என்பது பற்றியதாகும் என்று தெரிவித்தனா்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என். ரவி படிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: 

ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமின்றி அனைத்து ஆளுநர்களுக்குமான கண்டனம்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீதிமன்ற தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் படித்துவிட்டு, அது அவசியம் என நினைத்தால், திறமையான மூத்த வழக்குரைஞர் ஒருவரை அமர்த்தி நீதிமன்றத்தின் தீர்ப்பை விளக்கமாக தெரிந்துகொள்ள வேண்டும் என சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com