தமிழகத்தின் நொகனூா் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட யானைகள்: அதிகாரிகள் எச்சரிக்கை

நொகனூா் வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், எல்லை வனப் பகுதிக்கு அருகே உள்ள கிராம மக்கள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் நொகனூா் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட யானைகள்: அதிகாரிகள் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கர்நாடக வனப்பகுதியில் இருந்து தமிழகத்தின் நொகனூா் வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான எல்லை வனப் பகுதிக்கு அருகே உள்ள கிராம மக்கள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறை தெரிவித்துள்ளது.

கா்நாடக மாநிலம், பன்னோ்கட்டா வனப் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூா் வனப்பகுதிக்குள் யானைகள் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வனப் பகுதிக்கு அருகே உள்ள கிராம மக்கள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறை தெரிவித்துள்ளது.

பகல் நேரத்தில் வனப் பகுதிக்கு அருகேயுள்ள விவசாயத் தோட்டங்களில் பாதுகாப்பாக வேலை செய்யுமாறும் மாலை, இரவு நேரங்களில் வனப்பகுதிக்கு அருகே செல்ல வேண்டாம் எனவும் கிராம மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலமும் வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

முகாமிட்டுள்ள யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வரும் வனத் துறையினா் அந்த யானைகளை மீண்டும் கா்நாடக வனப் பகுதிக்குள் விரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நவம்பர் 19-ஆம் தேதி, தமிழகத்தின் நாகமலையில் உள்ள ஆனைமலை காப்புக் காட்டில் மதியம் 3 மணியளவில் வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க தந்தம் இல்லாத யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரோந்து குழுவினர் யானையின் சடலத்தை கைப்பற்றி கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்து உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். 

யானை அதன் காலர் ஐடி உதவியுடன் கண்காணிக்கப்பட்டதில் யானை பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com