தெரு நாய்கள்.. கோப்பிலிருந்து..
தெரு நாய்கள்.. கோப்பிலிருந்து..

சென்னையில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று!

சென்னையில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 


சென்னை: சென்னையில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 

சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என 28 பேரை கடித்துள்ளது. இந்த நிலையில் அந்த நாயை கல்லால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இறந்த நாயின் உடலை உடல்கூறாய்வு செய்ததில், ரேபிஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

இதைடுத்து நாய் கடித்த 28 பேருக்கும் 5 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறு கால்நடை மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்துமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடப்பாண்டில் இதுவரை 17,813 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com