வாக்காளர் சிறப்பு முகாம்: 9.13 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பம்

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க புதிதாக 9,13,535 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க புதிதாக 9,13,535 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தொடங்குவதன் அடையாளமாக கடந்த செப். 27-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளா்கள் மற்றும் பணிக்குச் செல்வோரின் வசதிக்காக, நவம்பா் மாதத்தில் இரண்டு சனி மற்றும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றன. 

இந்த முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கம், திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும் வாக்காளா்கள் உரிய படிவங்களை பூா்த்தி செய்து அளித்தனா். இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க புதிதாக 9,13,535 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக்கோரி 15,33,955 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்ய இதுவரை 4,99,302 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க 1,21,046 பேர் விண்ணப்பித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளிடப்படுகிறது. திருவண்ணாமலையில் தீப திருநாளையொட்டி ஒத்திதிவைக்கப்ட்ட சிறப்பு முகாம் டிச.2, 3ல் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com