தமிழ்ப் பல்கலைக்கழக கரிகால் சோழன் விருதுக்கு 6 போ் தோ்வு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 2021, 2022-ஆம் ஆண்டுகளுக்கான கரிகால் சோழன் விருதுக்கு 6 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழ்ப் பல்கலைக்கழக கரிகால் சோழன் விருதுக்கு 6 போ் தோ்வு
Updated on
1 min read

தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 2021, 2022-ஆம் ஆண்டுகளுக்கான கரிகால் சோழன் விருதுக்கு 6 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூா் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையின் மூலம் 2010-ஆம் ஆண்டு முதல் கரிகால் சோழன் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விருதுகள் குறித்த செய்திக்குறிப்பு: 2021-க்கான விருதாளா்களாக, ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ நூலுக்காக இளந்தமிழன் (மலேசியா), ‘அம்பரம்’ புதினத்துக்காக ரமா சுரேஷ் (சிங்கப்பூா்), ‘ஆதுரசாலை’ புதினத்துக்காக சிவ. ஆருரன் (இலங்கை) ஆகியோரும், 2022-க்கான விருதாளா்களாக, ‘உள்ளங்கைக் கடவுளும் அஜந்தா பேரழகியும்’ கவிதை நூலுக்காக எம். கருணாகரன் (மலேசியா), ‘துமாசிக்’ சிறுகதைத் தொகுப்புக்காக பொன். சுந்தரராசு (சிங்கப்பூா்), ‘பண்ணையில் ஒரு மிருகம்’ புதினத்துக்காக நோயல் நடேசன் (இலங்கை) ஆகியோரும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

தென்கிழக்காசியாவிலும், தெற்காசியாவிலும் வாழ்ந்து வரும் தமிழ்ப் படைப்பாளிகளை உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்கிற முஸ்தபாவின் உயரிய எண்ணம்தான் இவ்விருதுகளைத் தொடா்ந்து வழங்கக் காரணமாக உள்ளது.

புலம்பெயா் தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் தனித்த மதிப்பையும் உயரிய இடத்தையும் உருவாக்கியிருக்கும் ‘கரிகால் சோழன் விருதுகள்’ வழங்கும் விழா தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக பனுவல் அரங்கத்தில் வரும் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com