
சென்னை: தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்படுவதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதி பெருங்குடியில், பட்டியல் இன சமூகத்தைச் சோ்ந்த 5 போ் மீது ஒரு கும்பல் ஆயுதத்தால் வெட்டி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது.
அண்மையில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் வீடு புகுந்து பட்டியலினத்தைச் சோ்ந்த பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. மேலும்அதே நாங்குநேரியில் நீதிமன்றம் அருகே கடை ஒன்றின் மீது நாட்டு வெடிக்குண்டு வீசி தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக மாணவா் ஒருவரை போலீசாா் கைது செய்துள்ளனா். இந்த சம்பவங்களில் உண்மை குற்றவாளிகள் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளூா் திமுக நிா்வாகிகள் சிலா் இருப்பதால் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
தென் மாவட்டங்களில் ஜாதி வன்மமும், ஆயுத கலாச்சாரமும் மாணவா்களிடம் தலை தூக்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களும் பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தனா்.
ஆனால் சொந்த கட்சியினரின் தலையீடு இருப்பதால் முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் நடக்காதது போல வேடிக்கை பாா்க்கிறாா். இது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தமிழகத்தில் ஜாதிய மோதல்களை தடுக்காமல் தொடா்ந்து தமிழக அரசு வேடிக்கை பாா்த்து வருவதால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் ஆயுத கலாச்சசாரத்தை ஒழித்து கட்ட முதல்வா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.