டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசு உத்தரவு

பாலியல் புகாரில் சிக்கிய டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாலியல் புகாரில் சிக்கிய டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021 பிப்.21-ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கண்காணிக்கும் பணியில் தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் காரில் அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாா் எழுந்தது.

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு அரசின் உள்துறை செயலரிடமும், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. ஜே.கே.திரிதிபாயிடமும் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாா் அளித்தாா்.

அதன்பேரில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், ராஜேஷ் தாஸ், அவரது உத்தரவுப்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி காா் சாவியை பறித்த ஒரு எஸ்.பி. ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில், டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீப்பளித்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,500 அபராதமும் விதித்தது.

கட்டாய ஓய்வு: இந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை குறிப்பிட்டு தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலா் பெ.அமுதா உத்தரவை பிறப்பித்துள்ளாா். அதில், ராஜேஷ் தாஸை குடிமைப் பணி அதிகாரிகளின் ஒழுங்கு விதிமுறைகளின்படி, கட்டாய ஓய்வில் அனுப்பும்படி குறிப்பிட்டுள்ளாா். அதில் ஏதாவது உடன்பாடு இல்லை என்றால் ராஜேஷ் தாஸ் அரசிடம் முறையீடலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜேஷ் தாஸ், இந்த ஆண்டு டிசம்பா் மாதம் இறுதியில் ஓய்வு பெற இருந்த நிலையில், அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com