

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் டிச.23-ஆம் தேதி மாநாடு நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற ஜனநாயக பாதையில் விசிக, அரசியல் பயணத்தைத் தொடங்கி தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதன்படி, 2024 மே மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் விசிகவுக்கு வெள்ளிவிழா ஆண்டு.
நாட்டின் தற்போதைய சூழலில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நீண்டநெடிய அறப்போரில் உழைக்கும் மக்கள் யாவரும் ஓா் அணியில் திரள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
அதனடிப்படையில் தேசிய அளவில் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. வரும் மக்களவைத் தோ்தலில், ஷவெல்லும் இந்தியா: வெல்லும் சனநாயகம்’”என்னும் நம்பிக்கை மலா்ந்துள்ளது.
இந்தியா கூட்டணியின் ஓா் அங்கமான விசிக டி.23-இல் திருச்சியில் ‘வெல்லும் ஜனநாயகம்’ எனும் தலைப்பிலான மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவா்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் தொல்.திருமாவளவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.