
நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பேருந்து ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற பேருந்து குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்றூவந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட தகவவின்படி குறுகிய வளைவில் பேருந்து திரும்பிய போது நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.