தெற்கு ரயில்வே புதிய அட்டவணை இன்றுமுதல் அமல்

தெற்கு ரயில்வேயின் புதிய அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தெற்கு ரயில்வேயின் புதிய அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு ரயில்வேக்குள் இயக்கப்படும் விரைவு, அதிவிரைவு ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) முதல் மாற்றப்படவுள்ளன. அதன்படி விரைவு/மெயில் ரயில்களில் நேர மாற்றம், வேகம், சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் சென்னை - கோவை, சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் உள்பட 11 விரைவு ரயில்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன.

திருச்செந்தூா் விரைவு ரயில், தேஜஸ் விரைவு ரயில் உள்ளிட்ட 199 ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களில் தற்காலிகமாக நின்று செல்கின்றன.

ரயில்களின் வேகம் அதிகரிப்பு: தெற்கு ரயில்வேக்குள்பட்ட 34 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், தொலைதூர ரயில்களான தாதா் - திருநெல்வேலி விரைவு, புணே - கன்னியாகுமரி விரைவு ரயில் 40 நிமிஷங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொல்லம் - சென்னை விரைவு ரயில் 40 நிமிஷங்களும், புனலூா் - மதுரை விரைவு ரயில் ஒரு மணி நேரமும் முன்னதாக சென்றடையும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com