திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தல்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தல்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
Published on


திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பகுதியை சோ்ந்த ஒரு தம்பதி தனது ஒன்றரை வயது குழந்தையுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அந்த தம்பதியை ஏமாற்றி குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.  

இதையடுத்து அந்த தம்பதியினர் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். கோயில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனா். அதில் ஒரு கேமராவில், குழந்தையுடன் ஒரு பெண் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. 

இதுகுறித்து போலீசார் தொடா்ந்து விசாரணை நடத்தி, குழந்தையைக் கண்டுபிடிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com