100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம்!

நிதி பற்றாக்குறையால் 100 வேலைவாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம்!



புதுதில்லி: நிதி பற்றாக்குறையால் 100 வேலைவாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. 

உழைப்பதற்கான உரிமை என்ற நோக்கத்துடன் ஊரக பகுதி ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. 

அரசே நேரடியாக ஊராட்சி செயலர், தலைவர் மூலம் வேலை வழங்கப்படுகிறது. ஒப்பந்ததாரர் யாரும் கிடையாது. இந்த திட்டத்தின் மூலம் நீர் நிலைகளை புதுப்பித்தல், ஏரி, குளங்களை பராமரித்தல், மரம் நடுதல், காடு வளர்ப்பு, பாசனக் கால்வாய் பராமரிப்பு, தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த திட்டத்தில் மொத்த பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. பாகுபாடுகளின்றி இருபாலருக்கும் ஒரே சம்பளமாக ரூ.249 வழங்கப்படுகிறது.

கரோனா பேரிடர் நாள்களில் இந்த திட்டம் பல லட்சம் பேரை பட்டினியில் இருந்து காப்பாற்றி உள்ளதாக  சர்வதேச பொருளாதா அமைப்புகள் பாராட்டியுள்ளது. 

இந்த நிலையில், நிதி பற்றாக்குறையால் 100 வேலைவாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அதாவது, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு 2022-23 நிதியாண்டில் ரூ.89,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில், ரூ.60,000 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

ஆனால் தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதி குறைக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com