உலகின் மிக நீளமான பாம்பு இனம் சென்னை-ஐஐடியில் கண்டுபிடிப்பு

உலகிலேயே மிக நீளமான பாம்பு இனம் என அறியப்படும் வரிக்கோடுகளுடைய மலைப்பாம்பு இனம் சென்னை ஐஐடி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகின் மிக நீளமான பாம்பு இனம் சென்னை-ஐஐடியில் கண்டுபிடிப்பு
Published on
Updated on
1 min read


உலகிலேயே மிக நீளமான பாம்பு இனம் என அறியப்படும் வரிக்கோடுகளுடைய மலைப்பாம்பு இனம் சென்னை ஐஐடி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

வரிக்கோடுகளுடைய மலைம்பாம்பு இனத்தைச் சேர்ந்த பாம்பை கிண்டி தேசிய பூங்கா அதிகாரிகள் பிடித்துச் சென்றுனர். அது 7 முதல் 8 அடி நீளம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

உலகிலேயே மிக நீளமான மற்றும் அதிக எடை கொண்ட பாம்புகளின் இனத்தில் வரிக்கோடுகள் கொண்ட மலைம்பாம்பு இனம்தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை நிகோபார் தீவுகளில் மட்டுமே காணப்பட்டுவந்தது. இனப்பெருக்கம் செய்யும் அளவுக்கு இந்த இனப் பாம்புகள் இல்லாமல், சென்னை-ஐஐடி வளாகத்தில் ஒரு மலைப்பாம்பு எப்படி வந்தது என்பது புதிராக உள்ளது.

தேசிய பூங்கா அதிகாரிகள் எக்ஸ்பிரஸ்  குழுவினரிடம், வியாழன் இரவு பாம்பை பார்த்தது குறித்து அழைப்பு வந்ததை உறுதிப்படுத்தினர். “உடனடியாக, வேளச்சேரி மீட்பு மையம், கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் பாம்பு பிடிக்கும் இருளர் என தலா மூன்று குழுக்கள் அனுப்பப்பட்டன,” என்று மூத்த அதிகாரி கூறினார்.

வரிக்கோடுடைய மலைப்பாம்புகள் அச்சுறுத்தும் வகையைச் சார்ந்தது அல்ல என்பதால் மக்கள் பயப்பட வேண்டாம். மேலும், அவை மெதுவாகவே ஊர்ந்து செல்லும். கடந்த காலங்களிலும், சென்னை ஐஐடி வளாகத்துக்குள் மலைப்பாம்புகளை இரண்டு முறை பார்த்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்னை ஐஐடி வளாகத்துக்குள் எப்படி மலைப்பாம்புகள் வந்தன என்பது குறித்து ஆய்வுகளும் சந்தேகங்களும் எழுந்துவிட்டன. ஒன்று, சென்னை பாம்பு பண்ணையிலிருந்து குட்டி மலைப்பாம்பு ஒன்று வெளியேறி சென்னை ஐஐடி வளாகத்துக்குள் வந்திருக்கலாம். அது இங்கு குட்டிகளை ஈன்று இனப்பெருக்கம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், சென்னை பாம்பு பண்ணை இயக்குநர் ஆர். ராஜரத்தினம் கூறுகையில், எங்கள் பாம்பு பண்ணையிலிருந்து பாம்புகள் தப்பித்துச் செல்ல வாய்ப்பே இல்லை என்கிறார்.

அவ்வாறு இல்லாவிட்டால், யாரேனும் மலைப்பாம்புகளை எடுத்து வந்து, காவல்துறையிடம் சிக்காமல் இருக்க இங்கே விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com