நெல் வயலுக்கு பூச்சி மருந்து தெளித்தவர் உயிரிழப்பு!

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நெல் வயலுக்கு பூச்சி மருந்து தெளித்த விவசாயி உயிரிழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நெல் வயலுக்கு பூச்சி மருந்து தெளித்த விவசாயி உயிரிழந்தார்.

கூடலூர் 19 ஆவது வார்டு காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராசு மகன் பாண்டியன் (62), விவசாயி. இவருக்கு சொந்தமான நெல் வயல் வெட்டுக்காடு பகுதியில் உள்ளது. அதில் தற்போது, முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த விவசாயி பாண்டியன் கடந்த செப். 26 இல் கூடலூரில் உள்ள ஒரு உரக்கடையில் பூச்சி மருந்து வாங்கி நெல்லுக்கு தெளித்தார். அப்போது மயங்கி விழுகவே, அருகில் இருந்தவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர், அங்கிருந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். 

சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலையில் உயிரிழந்தார். குமுளி காவல் நிலைய காவல் துறையினட் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கூடலூர் மூனுசாமி கோயில் தெருவைச் சேர்ந்த வீரணன் மகன் குணசேகரன் (42) என்பவர் நெல் வயலில் மருந்து தெளிக்கும்போது மயங்கி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அக். 3-ல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com