தேவர் தங்கக் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க உத்தரவு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கான தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தேவர் தங்கக் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க உத்தரவு!
Published on
Updated on
1 min read

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கான தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் மணிமண்டபம் அமைந்துள்ளது. இங்குள்ள தேவா் சிலைக்கு தங்கக் கவசத்தை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழங்கினாா்.

இந்தக் கவசம் தேவா் குருபூஜை விழாவின் போது அணிவிக்கப்படும். பின்னா், இந்தக் கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். அதிமுக, தேவா் நினைவிடப் பொறுப்பாளா்கள் சாா்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதிமுக பொருளாளா் பொறுப்பில் இந்தத் தங்கக் கவசம் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓ. பன்னீா்செல்வம் இந்தக் கவசத்தின் காப்பாளராக இருந்தாா்.

இந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் அதிமுகவில் இருந்தும், பொருளாளா் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதால், வருகிற 30-ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை நடைபெறவுள்ளதையொட்டி, வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளரான தன்வசம் ஒப்படைக்க வங்கி நிா்வாகத்துக்கு உத்தரவிட கோரி மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், தேவர் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com