காவிரி நீர்: நீடாமங்கலத்தில் கடையடைப்பு!

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட வலியுறுத்தி நீடாமங்கலத்தில் புதன்கிழமை கடையடைப்பு நடைபெற்று வருகிறது. 
காவிரி நீரை திறந்துவிடக்கோரி நீடாமங்கலத்தில் நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டத்தால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
காவிரி நீரை திறந்துவிடக்கோரி நீடாமங்கலத்தில் நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டத்தால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


நீடாமங்கலம்: உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட வலியுறுத்தி நீடாமங்கலத்தில் புதன்கிழமை கடையடைப்பு நடைபெற்று வருகிறது. 

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உரிய நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குபின் திறந்து விடப்படும் குறைந்தபட்ச நீரையும் தடுக்கும் பாஜக மற்றும் அமைப்புகளை கண்டித்தும், தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் உழவர் பெருமக்கள்மீது அக்கறையில்லாமல் அலட்சியம் காட்டும் மத்திய அரசின் அலட்சிய போக்கை கண்டித்தும் காவிரிப்படுகை மாவட்டங்களில் கடையடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்திருந்தது.

இதன்படி, நீடாமங்கலத்தில் புதன்கிழமை கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தபால் அலுவலகம் முன்பு மறியல் நடந்து வருகிறது. 

போராட்டத்திற்கு திமுக சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான பி.ராசமாணிக்கம் தலைமை வகித்தார். மத்தியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச் செல்வன், திமுக ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்த், ந.கவியரசு, மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் வீரா.தேசபந்து, திராவிடர்கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம், நகரதிமுக செயலாளர் ஆர்.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி டாக்டர் நிரோஜாகிஷோர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்  ஜான்கென்னடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் புதியவன்,மதிமுக நிர்வாகிகள் ராஜா,மாருதி.தியாகராஜன், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணிசேகர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பி.ஜி.ஆர்.ராஜாராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நீடாமங்கலம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com