காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி திருச்சியில் மறியல்: 300 பேர் கைது

காவிரியில் தண்ணீர் திறந்தவிடக் கோரி புதன்கிழமை திருச்சியில் போராட்டத்தில் பு ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார்ர் கைது செய்தனர். 
காவிரியில் தண்ணீர் திறந்தவிடக் கோரி புதன்கிழமை திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர். 
காவிரியில் தண்ணீர் திறந்தவிடக் கோரி புதன்கிழமை திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர். 

திருச்சி: காவிரியில் தண்ணீர் திறந்தவிடக் கோரி புதன்கிழமை திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

தமிழ்நாட்டுக்கு கா்நாடக அரசு மாத வாரியாக கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும், கா்நாடகத்தில் மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபா் 11 ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என விவசாயிகள் கூட்டமைப்பினா் முடிவு செய்துள்ளனா்.

அதன்படி, காவிரியில் தண்ணீர் திறந்த விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், திறக்க அழுத்தம் தராமல் இருந்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும் திருச்சியில் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் விவசாய சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  

உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும், மாவட்டத்தில் 20 சதவிகித கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com