திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடத்தில் அமலாக்கத்துறை சோதனை

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமலாக்கத் துறை அலுவலர்கள் வியாழக்கிழமை காலைமுதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றிலுள்ள மணல் குவாரியில் ஆய்வு செய்யும் அமலாக்கத்துறை அலுவலர்கள்.
திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றிலுள்ள மணல் குவாரியில் ஆய்வு செய்யும் அமலாக்கத்துறை அலுவலர்கள்.
Published on
Updated on
1 min read

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமலாக்கத்துறை அலுவலர்கள் வியாழக்கிழமை காலைமுதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகளவில் மணல் அள்ளப்பட்டதா, முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதா என்ற அடிப்படையில் மணல் குவாரிகள், குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் ஒரு மாதமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மருவூர் கொள்ளிடம் ஆற்றில் புதன்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனர்.
இதனிடையே பலத்த காற்று வீச தொடங்கியதால், ட்ரோனை பறக்கவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சோதனை நடவடிக்கையை அலுவலர்கள் பாதியில் ரத்து செய்து திரும்பினர்.

இதைத்தொடர்ந்து, திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அலுவலர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்கின்றனர். இவற்றை ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய காவல் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com