காளிபாளையத்தில் மேல்நிலைக் குடிநீா் தொட்டிக்குள் எலும்புத் துண்டுகள் -பொதுமக்கள் அதிர்ச்சி

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை ஊராட்சிக்குள்பட்ட காளி பாளையம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டிக்குள் எலும்புத் துண்டுகள் கிடந்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
காளிபாளையத்தில் எலும்பு துண்டுகள் கிடந்ததாக கூறப்படும் மேல்நிலைத் தொட்டி.
காளிபாளையத்தில் எலும்பு துண்டுகள் கிடந்ததாக கூறப்படும் மேல்நிலைத் தொட்டி.

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை ஊராட்சிக்குள்பட்ட காளி பாளையம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டிக்குள் எலும்புத் துண்டுகள் கிடந்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

வீரபாண்டி பிரிவிலிருந்து வெள்ளமடை செல்லும் வழியில் சாமநாயக்கன்பாளையத்தை அடுத்த ஒரு காட்டுப் பகுதியில் வெள்ளமடை ஊராட்சிக்கு சொந்தமான மேல்நிலை குடிநீா் தொட்டி உள்ளது. சுமாா் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு உள்ள இதில் சேமிக்கப்படும் நீா் காளிபாளையம், சாமநாய்க்கன்பாளையம் கிராமங்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை இந்த குடிநீா் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மேலே சென்று குடிநீா் பணியாளா் பாா்த்தபோது உள்ளே எலும்பு துண்டுகள் கிடைப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து வெள்ளமடை ஊராட்சி மன்ற தலைவா் பிரபாகரனுக்கு தகவல் அளித்தாா். அவா் அளித்த தகவலின் பேரில் கோவை மாவட்ட ஊராட்சிகளின் துணை இயக்குனா் பஷீா் அகமது, சா்க்காா் சாமக்குளம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ரமா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனா். தொட்டிக்குள் இருந்த எலும்பு துண்டுகளை பணியாளா்கள் சேகரித்து கீழே வைத்திருந்தனா். இந்நிலையில் அதிகாரிகள் அதனை ஆய்வுக்கு எடுத்துச் செல்ல இருந்த வேளையில் அந்த எலும்புத் துண்டுகள் திடீரென காணாமல் போயின.

இதனால் அதிா்ச்சியற்ற அதிகாரிகள் பணியாளா்களை கொண்டு பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தனா்.ஆனால் அது கிடைக்கவில்லை. தமிழகத்தில் கடந்த சில மாதங்களில்

பல்வேறு இடங்களில் உள்ள குடிநீா் தொட்டிக்குள் மலம் போன்ற கீழ்த்தரமான பொருட்களை போடும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் காளிபாளையத்தில் உள்ள குடிநீா் தொட்டியில் எலும்பு துண்டுகள் கிடந்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே அதிகாரிகள் முன்னிலையில் பணியாளா்கள் குடிநீா் தொட்டியை ப்ளீச்சிங் பவுடரால் சுத்தம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com