மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் மூதாதையருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

புரட்டாசி மாதத்தின் மஹாளய அமாவாசையை முன்னிட்டு, காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் பக்தா்கள் மூதாதையருக்கு திதி, பிண்டம் கொடுத்து சனிக்கிழமை வழிபட்டனர்.
மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் மூதாதையருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

பவானி: புரட்டாசி மாதத்தின் மஹாளய அமாவாசையை முன்னிட்டு, காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் பக்தா்கள் மூதாதையருக்கு திதி, பிண்டம் கொடுத்து சனிக்கிழமை வழிபட்டனர்.

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்த மஹாளய அமாவாசை எனப்படுகிறது. இந்நாளில் மூதாதையருக்கு தா்ப்பணம், திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. 

இந்நாளில் ஆண்டுதோறும் காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில்  மஹாளய அமாவாசை நாளில் திரளான பக்தா்கள் மூதாதையருக்கு வழிபாடு நடத்துவது வழக்கம். மகாளய அமாவாசை நாளான சனிக்கிழமை மூதாதையர் வழிபாட்டுக்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர். 

நிரந்தர பரிகாரம் மண்டபம், தற்காலிக பரிகாரக் கூடங்கள் நிரம்பியதை தொடர்ந்து, படித்துறைகள் மற்றும் வழித்தடங்களில் அமர்ந்தும் மூதாதையர் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து எள், தண்ணீருடன் தர்ப்பணம் வைத்தும், பிண்டம் காவிரியில் கரைத்தும் புனித நீராடினர். தொடர்ந்து சங்கமேஸ்வரர் மற்றும் ஆதிகேச பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் ஈரோடு - பவானி சாலையில் கூடுதுறை பிரிவு அருகே கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனம் நிறுத்துமிடம் பக்தர்கள் வந்த வாகனங்களால் நிரம்பியதால் சாலையோரங்களில் வாகனங்கள் அணிவகுத்து  நிறுத்தப்பட்டன.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சி அளித்தது. இதனால், புனித நீராட வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதனால், படித்துறையில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு, பக்தர்கள் நீராட கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. காவிரி ஆற்றில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே நீராட தடுப்புகள் மற்றும் பக்தா்கள் ஆழமான பகுதிக்குச் செல்வதைத் தடுக்க தீயணைப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க தீயணைப்புத் துறையினர் தொடர் கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டனர்.

பவானி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும், கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். மஹாளய அமாவாசை நாளான சனிக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தை காட்டிலும் அதிகமான கூட்டம் காணப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com