பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கனிமொழி

நாட்டில் பெண்கள் ஒடுக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், தாங்கள் யாசகம் கேட்கவில்லை, உரிமைக்காக போராடுகிறோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.  
கனிமொழி
கனிமொழி

நாட்டில் பெண்கள் ஒடுக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், தாங்கள் யாசகம் கேட்கவில்லை, உரிமைக்காக போராடுகிறோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.  

சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு இன்று (அக். 14) நடைபெற்று வருகிறது. திமுக  எம்.பி. கனிமொழி முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பல பெண் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

இதில் பேசிய கனிமொழி எம்.பி., மத்திய பாஜக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் இடஒதுக்கீடு நிறைவேற 50 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் பாஜக அதனை நிறைவேற்றாது. 

பாஜக கூட்டணி அமைத்துள்ள புதுச்சேரியில் பட்டியலின பெண் என்பதால் அமைச்சரே ராஜிநாமா செய்யும் நிலை உள்ளது.  பழங்குடியின பெண் என்பதால் குடியரசுத் தலைவரும் பல இடங்களில் அவமதிக்கப்படுகிறார். பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள், நாங்கள் யாசகம் கேட்கவில்லை, உரிமைக்காக போராடுகிறோம். யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல் துறையில் இடமளிக்கப்பட்டது. கருணாநிதி இதனை சாத்தியப்படுத்தினார் எனக் குறிப்பிட்டார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com