அதிமுக-பாஜக கூட்டணி முறிவில் திமுக அச்சம்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

அதிமுக - பாஜக கூட்டணி முறிவில் திமுக அச்சத்தில் இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 
ஜெயக்குமார்
ஜெயக்குமார்


சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவில் திமுக அச்சத்தில் இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை  ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். 
 
அதிமுக 2 கோடிக்கு அதிகமான தொண்டர்களை கொண்ட இயக்கமாக திகழ்ந்து வருகிறது. 

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்விகளுக்கு தேர்தலுக்கான நேரம் வரும் போது பதில் கிடைக்கும்.

பாஜக-அதிமுக கூட்டணி குறித்து அதிமுக தலைமையில் அன்று தெளிவான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் வரும் காலங்களில் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும்.

திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அங்கிருந்து விலகி வந்ததும் அதிமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் ஜெயகுமார் தெரிவித்தார்.

காவிரி உரிமையை அன்றிலிருந்து இன்றுவரை பாதுகாப்பது அதிமுக தான். அதை தாரைவார்த்து கொடுத்தது திமுக என விமரிசனம் செய்த ஜெயகுமார், சென்னை வந்த சோனியாகாந்தியிடம் காவிரி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கலமே என கேள்வி எழுப்பினார். 

பெண் உரிமை குரித்தும் பேசும் திமுக, அந்த கட்சியின் தலைவராக கனிமொழியை நியமனம் செய்யுங்களேன். பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மத்தியில் கொண்டு வந்த போது அதற்கு முதல் கையெழுத்து போட்டது அதிமுக. உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத பெண்கள் போட்டியிட கையெழுத்து போட்டது அதிமுக அரசு தான் என கூறினார். 

ஆனால் 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அரசு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொண்டுவராதது ஏன் என ஜெயகுமார் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளதாகவும், கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்து வருவதாக குற்றம் சாட்டிய ஜெயகுமார், நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருவதால் ஆளும் கட்சியே திணறும் வகையில் உள்ளதாக ஜெயகுமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com