
கனமழை காரணமாக கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூா், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
அதன்படி தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.