
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே பாராட்டியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியதாவது, கொளத்தூர் தொகுதிக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் புத்துணர்வு பெறுகிறேன். 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூர் தொகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 1896 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.
அறிவித்த நாளுக்கு ஒரு நாள் முன்பே பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ், தனது தொகுதியில் 3 முக்கிய பணிகள் நிறைவேற்றப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே நன்றி கூறியுள்ளார்.
கட்சி மற்றும் அரசியல் பாகுபாடின்றி மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.