தேக்கடி ஏரியில் படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

தேக்கடி ஏரியில் படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழக கேரள எல்லையில் உள்ள தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

கம்பம்: ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழக கேரள எல்லையில் உள்ள தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தேனி மாவட்ட எல்லையிலுள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏராளமான சுற்றுலாத் தளங்களில் தேக்கடி ஏரி முக்கியமானது. இங்கு, படகு சவாரி செல்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

ஆயுத பூஜை விடுமுறை தினத்தை கொண்டாட தேக்கடி ஏரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். குளிர்ந்த பருவநிலை இருப்பதால் தேக்கடி சாலையில் நடைபயணமாக சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். 

மேலும் கேரள மாநில சுற்றுலாத் துறை வளர்ச்சி கழகம் சார்பில் தற்போது படகு சவாரி 5 முறை இயக்கப்படுகிறது. காலையில் 7.30, 9.30, 11.15 மற்றும் பிற்பகலில் 1.15, 3.30 ஆகிய நேரங்களில் படகுகள் இயக்கப்படுகின்றன.

ஒன்றரை மணி நேரம் படகு சவாரி செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.225 வசூலிக்கப்படுகிறது. நேரடியாக தேக்கடி படகு துறையில் கட்டணத்தை செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என சுற்றுலா துறையினர் அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com