ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்: வானதி சீனிவாசன்

ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானிதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்:  வானதி சீனிவாசன்

சென்னை: ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானிதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையின், பிரதான நுழைவாயில் அருகே, புதன்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ரௌடி ஒருவர் பெட்ரோல் பாட்டில்களை வீசியுள்ளார். பாதுகாப்பு வீரர்கள் குண்டு வீசியவரை மடக்கிப் பிடித்த நிலையில், மேலும் ஒரு பாட்டிலை வீசியுள்ளார். ஆளுநர் மாளிகை முன்பு இருந்த இரும்பு தடுப்பு அருகில்  விழுந்து, லேசாக தீப்பிடித்து எரிந்தது. உடனே காவலர்கள் அதனை அணைத்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானிதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல் வீசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரௌடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல் துறையே தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம் மேலும் நான்கு பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் குண்டு வைத்து அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளை, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய திமுக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கி சீர்குலைந்துள்ளது.

இந்தச் சூழலில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்தால், அதனால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. பயங்கரவாதிகளை பயங்கரவாதிகளாகவே பார்க்க வேண்டும். அவர்களை விடுவித்தார் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என அரசியல் லாபக் கணக்கு பார்க்கக் கூடாது.

திமுக அரசின் செயல்பாடுகளை, அதன் இந்து விரோதப் போக்கை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால், பகிர்ந்தால் கூட வார இறுதி நாட்களில் நள்ளிரவில் வீடு புகந்து கைது செய்யவே தமிழ்நாடு காவல்துறைக்கு நேரம் போதவில்லை. 

ஆளுநர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீச துணிகிறார் என்றால், அது ஒரு தனி நபரின் முயற்சியாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரௌடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு காவல் துறை திமுகவினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது  சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com