சேலம் மாவட்டத்தில்  தற்போது 28,92,609 வாக்காளர்கள்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28 லட்சத்து 92 ஆயிரத்து 609 வாக்காளர்கள் உள்ளனர். 
சேலம் மாவட்டத்தில்  தற்போது 28,92,609 வாக்காளர்கள்
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28 லட்சத்து 92 ஆயிரத்து 609 வாக்காளர்கள் உள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் கார்மேகம், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். 

இதன்படி, சேலம் மாவட்டத்தில் 28 லட்சத்து 92 ஆயிரத்து 609 வாக்காளர்கள் உள்ளனர். 

இதில் ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 41 ஆயிரத்து 717 பேரும், பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 50 ஆயிரத்து 621 பேரும், இதர வாக்காளர்கள் 271 பேர் என மொத்தம் 28 லட்சத்து 92 ஆயிரத்து 609 பேர் வாக்காளர்கள் உள்ளனர். 

தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கூறும்போது வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகளுக்கு படிவங்கள் 27.10.2023  முதல் 9.12.2023 வரை பெறப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் நகராட்சி  மாநகராட்சி அலுவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் விண்ணப்ப படிவுகளை பெற்று பூர்த்தி செய்த தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்  என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6,  பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7,  குடியிருப்பை மாற்றியதற்கும் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிடுவதற்கும் என படிவம் 8 -ஐ பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்த சுருக்கு முறை திருத்தத்தில் 17 வயது பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 1.4.2024 முதல் 1.7.2024 மற்றும் 1.10.2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதியானதாக கொண்டு 18 வயதில் பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்கும் படிவம்  6 விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com