ஓட்டுநருக்கு நெஞ்சுவலி: பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்!

வாழப்பாடி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி, சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்த தனியார் பேருந்து.
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்த தனியார் பேருந்து.

வாழப்பாடி: வாழப்பாடி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி, சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வாழப்பாடி வழியாக சென்ற தனியார் பேருந்து, இன்று சனிக்கிழமை காலை மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அடுத்துள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறிய பேருந்து, சாலை தடுப்பில் மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று, பேருந்து கண்ணாடிகளை உடைத்து, பேருந்து ஓட்டுநரான ராசிபுரம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (33) மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால், சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com