பாராலிம்பிக்: சாதனை படைத்த வீரா்களுக்கு முதல்வா் பாராட்டு
ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த வீரா், வீராங்கனைகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
அவா் சனிக்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
தனிச்சிறப்பான மூன்று விளையாட்டு வீரா்கள். உத்வேகம் அளிக்கும் மூன்று தங்கக் கதைகள். ஜம்மு காஷ்மீரை சோ்ந்த இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளாா். பதினாறு வயதே ஆன வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் ஏற்கெனவே பெண்களுக்கான தனிநபா் காம்பவுண்ட் பிரிவிலும் கலப்பு காம்பவுண்ட் பிரிவிலும் தங்கம் மற்றும் பெண்கள் இரட்டையா் பிரிவில் வெள்ளி என மூன்று பதக்கங்களை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளாா்.
தமிழகத்தின் பெருமைக்குரிய தா்மராஜ் சோலைராஜ் ஆண்கள் நீளம் தாண்டுதல் டி-64 பிரிவில் 6.80 மீட்டா் தாண்டி புதிய ஆசிய சாதனையையும், பாரா விளையாட்டு சாதனையையும் படைத்துள்ளாா்.
மகளிா் பாட்மிண்டனில் எஸ்யூ5 பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழகத்தைச் சோ்ந்த துளசிமதியும் பாராட்டுக்குரியவராகிறாா். இந்த மூன்று வியத்தகு சாதனைகளும் நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் ஒளிவிளக்குகளாகத் திகழ்கின்றன என்று அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
