வாணியம்பாடி: வீட்டின் மீது நாட்டு வெடி வீச்சு

வாணியம்பாடி அருகே வீட்டின் மீது நாட்டு வெடி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி: வீட்டின் மீது நாட்டு வெடி வீச்சு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வீட்டின் மீது நாட்டு வெடி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் சந்திரன். அவரது மனைவி இனியவள் (52 வயது). இவர்களுக்கு குகன் என்ற மகனும், ஆர்த்தி மற்றும் பிரீத்தி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

ரயில்வே ஊழியர் சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவருடைய பணி மகன் குகனுக்கு வழங்கப்பட்டு அவர் சேலத்தில் பணியாற்றி வருகிறார்.

இரு மகள்களும்  திருமணமான நிலையில் வாணியம்பாடியில்  இனியவள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து  வந்த 2 மர்ம நபர்கள், இனியவள் வீட்டின்  மீது கம்பி சுற்றப்பட்ட  நாட்டு வெடி வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

வெடி  பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், மின் விளக்குகள், மற்றும் கதவு உடைந்து சேதமானது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து  பார்த்தபோது வீட்டின் முன்பு நெருப்பு மற்றும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

மேலும்  இருசக்கர வாகனத்தில் 2 பேர் செல்வதை பார்த்து  உடனடியாக வீட்டிற்குள் சென்று காயமின்றி அதிர்ஷ்டவசமாக  உயிர்த்தப்பிய  இனியவளை வெளியே அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து, வாணியம்பாடி கிராமிய காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார், ஆய்வாளர் பழனி ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு அங்கு சிதறி கிடந்த வெடி துகள்கள், கம்பி ஆகியவற்றை கைபற்றினர். தொடர்ந்து வெடி வீசி சென்றது யார்? என்றும் காரணம் குறித்தும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com