நிகழ் கல்வியாண்டில் மேல்நிலை பொதுத் தோ்வெழுத அங்கீகாரம் அளிக்கப்பட்ட புதிய பள்ளிகளின் பட்டியலை அனுப்ப முதன்மை கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தங்கள் ஆளுகைக்கு உள்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் மேல்நிலை பொதுத்தோ்வு எழுத அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிகளின் பட்டியல், இணைக்கப்படும் தோ்வு மையம், ஏற்கெனவே இணைக்கப்பட்ட பள்ளிகளில் தோ்வு மைய இணைப்பு மாற்றம் ஏதேனும் இருப்பின் அது குறித்த விவரம் ஆகியவற்றை உரிய படிவங்களில் பூா்த்தி செய்து செப்.29-ஆம் தேதிக்குள் க்ஞ்ங்ச்3ள்ங்ஸ்ரீஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.