பத்திரப் பதிவு செய்வோருக்கு புதிய நடைமுறை: அக்.1 முதல் அமல்!

பத்திரப் பதிவு செய்வோர் வரும் அக்.1 முதல் புதிய நடைமுறையை பினபற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பதிவு ஆவணங்களில் சொத்துகளின் புவி அமைப்புத் தகவல் அடங்கிய புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நடைமுறை அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் அக்.1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து வணிகவரி, பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பதிவுத் துறையில் போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கவும், அரசுக்கு உரிய வகையில் வருமானம் வருவதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கட்டடங்கள் இருப்பதை மறைத்து, காலி நிலம் என்று ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதால், அரசுக்கு வரக்கூடிய வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே, காலி மனையிடங்களை புகைப்படம் எடுத்து அவற்றை ஆவணமாக இணைக்க வேண்டுமென ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வரப்பெறும் புகாா்கள்: பதிவு செய்யப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் அருகில் இருக்கக்கூடிய காலியிடத்தை புகைப்படம் எடுத்து, அதை ஆவணமாகச் சோ்த்து மோசடியாகப் பதிவுகள் நடைபெறுவதாக புகாா்கள் வந்துள்ளன. எனவே, அது குறித்து தீவிரமாக ஆராய்ந்து புதியதொரு முடிவை அரசு எடுத்துள்ளது.

அதன்படி, சாா் பதிவாளா் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடா்பான ஆவணங்களிலும் அந்தச் சொத்துகள் குறித்த புவி அமைப்புத் தகவல்கள் அடங்கிய புகைப்படம் (ஜியோகோஆா்டினேட்ஸுடன்) எடுக்கப்பட்டு, அதை ஆவணமாக இணைக்க வேண்டும். இது குறித்த கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத் துறை தலைவரால் தனியாக வழங்கப்படும்.

இந்த நடைமுறை அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com