நடராஜர் கோயிலுக்கு புதிய யானை: தீட்சிதர்கள் சார்பில் கஜபூஜை

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தினம் நடைபெறவுள்ள நித்ய கஜ பூஜைக்காக நிரந்தர யானை ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நிரந்திரமாக தங்க வந்துள்ள சிவகாமலட்சுமி யானையை வரவேற்று அழைத்துச் சென்ற பொதுதீட்சிதர்கள்
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நிரந்திரமாக தங்க வந்துள்ள சிவகாமலட்சுமி யானையை வரவேற்று அழைத்துச் சென்ற பொதுதீட்சிதர்கள்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தினம் நடைபெறவுள்ள நித்ய கஜ பூஜைக்காக நிரந்தர யானை ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிரந்தரமாக தங்கி பூஜைகளில் பங்கேற்பதற்காக பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மதுரையிலிருந்து உபயதாரர் சென்னை சி.ஏ.நடராஜர் குடும்பத்தினர் மூலம் ஞாயிற்றுக்கிழமை யானை கொண்டு வரப்பட்டது. 

யானைக்கு சிவகாமலட்சுமி என்ற பெயர் பொறிக்கப்பட்ட டாலர் பொருத்தப்பட்டது.

கிழக்கு கோபுர வாயிலில் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் யானையை கும்ப மரியாதை அளித்து வரவேற்று அழைத்துச் சென்றனர். 

பின்னர் சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீமந் நடராஜபெருமான் வீற்றுள்ள சித்சபை முன்பு பொதுதீட்சிதர்கள் சார்பில் யானைக்கு லட்டுபாவாடை பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது.  யானைக்கு சிவகாமலட்சுமி என்ற பெயரிடப்பட்டது. 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்டளைதாரர் நி.பாலதண்டாயுத தீட்சிதர், பட்டு தீட்சிதர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com