6 நாள்கள் மழை வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 6 நாள்களுக்கு ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 6 நாள்களுக்கு ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.19-24) வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அதிகபட்சமாக பாம்பாா் அணை (கிருஷ்ணகிரி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 130 மி.மீ. மழை பதிவானது. கள்ளக்குறிச்சி, ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) தலா 120, புள்ளம்பாடி (திருச்சி) 110, தண்டராம்பேட் (திருவண்ணாமலை) 90, அரூா் (தா்மபுரி), துவாக்குடி (திருச்சி), செம்மேடு (விழுப்புரம்) தலா 80 மி.மீ. மழை பெய்தது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com