நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி புகார்

நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி
Published on
Updated on
1 min read


சென்னை: நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும் விடியோ வெளியிட்டு மிரட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் அளித்துள்ள புகார் மனுவில், 

தற்போது பெங்களூருவில் வசித்து வரும் முன்னாள் நடிகையான விஜயலட்சுமி, எங்கள் கட்சித் தலைவர் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு உண்மைக்கு மாறான பெய்யான குற்றச்சாட்டுகளோடு ஒரு புகார் கொடுத்து, பின்னிட்டுக் கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்சொன்ன புகாரைத் திரும்பப்பெற்றுக் கொண்டார். 

இந்நிலையில், விஜயலட்சுமி கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு, எங்கள் கட்சி மற்றும் கட்சித் தலைவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் வீரலட்சுமி என்ற பெண்ணும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு, விஜயலட்சுமியைத் தூண்டிவிட்டு அவருக்கு உதவிகள் செய்து சீமான் மீது முந்தைய புகாரில் இல்லாததும், கூடுதல் பெய்யான குற்றச்சாட்டுகளோடு புதிதாக ஒரு புகாரை கடந்த 28.8.2023 இல் காவல் ஆணையரிடம் விஜயலட்சுமி கொடுத்துள்ளார்.

சீமானிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும். அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டுமென்ற கெட்ட நோக்கங்களோடு கடந்த ஒரு மாத காலமாகச் செயல்பட்டு வந்த நிலையில், விஜயலட்சுமி திட்டம் நிறைவேறாததை அறிந்து, மேற்சொன்ன புகாரைக் கடந்த 15.9.2023 இல் மீண்டும் விஜயலட்சுமி திரும்பப்பெற்றுக்கொண்டு பெங்களூரு சென்றுவிட்டார். 

தற்போது, விஜயலட்சுமி 2011 இல் கொடுத்த வழக்கு மற்றும் 28.8.2023 இல் கொடுத்த புகார் மனு ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில், சீமானை ஏதேனும் வகையில் மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் விஜயலட்சுமி 22.9.2023 ஆம் தேதி சமூக வலைதளங்களில், நீர் மற்றும் உணவு எதுவும் அருந்தாமல் நானும், தன் அக்காவும் உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகவும், தன் அக்காவையும் தன்னுடன் அழைத்துச் செல்லப்போவதாகவும், அதற்கு சீமானும், அவரது கட்சியுமே காரணம் என்று கணொளிப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்துள்ளார். 

விஜயலட்சுமி, அவரது வாழ்க்கையில் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் பல நபர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்களைக் கூறி, தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி, பல முறை தற்கொலை முயற்சி செய்துள்ளார். 

இந்த நிலையில், பெய்யான குற்றச்சாட்டுக்களோடு அவதூறையும் பரப்பி, நானும் தன் அக்காவும் உயிரை மாய்த்துக்கொள்வோம் என்று சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும் காணொளி வாயிலாக மிரட்டல் விடுத்துவருகிறார். ஆகவே, மேற்சொன்ன விஜயலட்சுமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்பட வேண்டுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com