நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 24) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்


திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 24) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய ரயில்வே சாா்பில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை-மைசூரு, சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவை, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகம், பிகார், மேற்கு வங்கம், கேரளம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் சேவையை மேம்படுத்தும் வகையில், ஒன்பது வந்தே பாரத்  விரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1 மணிக்கு பிரதமா் மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்,  மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி), மு.அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவையானது திங்கள்கிழமை முதலே தொடங்குகிறது. இதன் முதல் பயணிகள் சேவை சென்னை எழும்பூரில் இருந்து திங்கள்கிழமை பிற்பகல் 2.50 மணிக்குத் தொடங்குகிறது. இந்த ரயிலானது திங்கள்கிழமை இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் சேவை செவ்வாய்க்கிழமை கிடையாது. எனவே, திருநெல்வேலியில் இருந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு முதல்முறையாக இந்த ரயில் சேவை தொடங்கவுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயிலானது விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வதற்கு சாதாரண ஏசி பெட்டிக்கு ரூ.1665, எக்ஸிகியூட்டிவ் பெட்டிக்கு ரூ.3,055 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com