
சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க முடிவெடுத்துள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்க குறிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அந்த குறிப்பில், சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமெரிக்காவில் உள்ள டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்று சர்வதேச அளவிலான தீம் பார்க் அமைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விளையாட்டு அரங்குகள், நீர் விளையாட்டுகள், ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும் வகையில் இந்த தீம் பார்க் அமைக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.