மன்மோகன் சிங் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள்
வாழ்த்துகள்! உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, பிரதமராக அவரது தலைமை
மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு
இந்தியாவின் எதிர்காலத்தை மறுவடிவமைத்தது. 

அவரது ஆர்ப்பாட்டமில்லாத, அறிவார்ந்த மற்றும் பணிவான அணுகுமுறை எக்காலத்திலும் தலைமைத்துவத்திற்கு மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூரப்படுவார். இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com