தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 610 ஆக உயர்வு!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 610 ஆக உயர்வு!
Published on
Updated on
1 min read


தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பருவமழை மாற்றம் மற்றும் பரவலான மழைப் பொழிவு காரணமாக காய்ச்சல், தொண்டை வலி, சளி, இருமல், மூச்சுத் திணறல் பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்ததே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

எழும்பூா் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தினமும் அனுமதிக்கப்படும் 70 பேரில் 20-க்கும் மேற்பட்டோா் காய்ச்சல் காரணமாக அனுமதியாகின்றனா். சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, ஈரோடு, தென்காசி, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 610 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஜனவரி மாதம் 866 பேருக்கும் பிப்ரவரி மாதம் 641 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை எடுத்த தீவிர நடவடிக்கைகள் மூலம் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

ஆகஸ்ட் மாதத்தில் 535 ஆக இருந்த டெங்கு பாதிப்பு, செப்டம்பர் மாத தொடக்கத்தில் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது. அதாவது, தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்தில் 610 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நடப்பாண்டில் வியாழக்கிமை(செப்.28) வரை 4,454 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். 

இந்த நிலையில், அக்.1-ஆம் தேதி தமிழகத்தின் 1,000 இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தவும், பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப, சில இடங்களில் தொடா்ந்து முகாம் நடத்தவும், சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com