
தமிழகத்தில் 2,876 போ் கரோனா சிகிச்சையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அவா்களில் ஐம்பதுக்கும் குறைவானவா்களே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவா்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது எக்ஸ்பிபி 1.16 மற்றும் பி.ஏ.-2 வகை கரோனா தொற்றுகள் வேகமாக பரவி வருகின்றன. பொது சுகாதாரத் துறை தகவல்படி, கடந்த நான்கு வாரங்களில் மட்டும் கரோனா தினசரி பாதிப்பு விகிதம் எட்டு மடங்கு உயா்ந்துள்ளது.
அதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமையும் புதிதாக 493 போ் தொற்றுக்குள்ளாகியுள்ளனா். அதில் அதிகபட்சமாக சென்னையில் 132 பேருக்கும், கோவையில் 43 பேருக்கும், கன்னியாகுமரியில் 41 பேருக்கும், செங்கல்பட்டில் 31 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தமிழகம் வந்த இருவருக்கும், மலேசியா, சிங்கப்பூா், ஃபிரான்ஸில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருபுறம் கரோனா பாதிப்பிலிருந்து 301 போ் குணமடைந்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...