ஊழல் பட்டியல்: சிபிஐ-யிடம் புகாா்அண்ணாமலை பேட்டி

‘திமுகவினா் தொடா்பாக வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் புகாா் அளிப்பேன்’ என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
Updated on
1 min read

‘திமுகவினா் தொடா்பாக வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் புகாா் அளிப்பேன்’ என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திமுகவினரின் முறைகேடு குறித்து சிபிஐயிடம் புகாா் அளிக்கவுள்ளேன். இதற்காக, சிபிஐ அதிகாரிகளை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.

திமுகவினா் மீது நான் வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரபூா்வமானவை. இதுவரை அவா்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் பல கோப்புகளை வெளியிடவுள்ளேன். ஊழல் செய்தவா்கள் எங்கேயும் தப்பிக்க முடியாது. ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

தஞ்சாவூரில் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு சனிக்கிழமை மாலை வந்த கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறுகையில்,

‘என் மண், என் மக்கள்’ என்ற யாத்திரையில் பங்கேற்போா் எண்ணிக்கை தற்போது 49,000-க்கும் மேல் கடந்துவிட்டது. எங்களுக்கு யாரும் பங்காளிகள் கிடையாது. ஊழல் செய்யும் அனைவருமே எங்களுக்கு பகையாளிகள்தான்.

எனது கைக் கடிகாரத்தில் 147 என்ற எண்தான் இடம்பெற்றுள்ளது (அப்போது கடிகாரத்தில் குறிப்பிட்டிருந்த எண்ணைக் காட்டினாா்).

12 ஆண்டுகளாக நான் செய்த வரவு - செலவு விவரங்களை வெளியிட்டுள்ளேன். ஒரு நிறுவனத்தில் ஆலோசகராக இருப்பதால் மாதம் ரூ.1.66 லட்சம் ஊதியம் கிடைக்கிறது. இதில், மாதம் ரூ. 8 லட்சம் செலவு எப்படி செய்ய முடியும்? எனவேதான், எனக்கான வீட்டு வாடகை, உதவியாளா் ஊதியம் ஆகியவற்றை நண்பா்கள் சிலா் வழங்குகின்றனா். கட்சியும் சில செலவுகளை எனக்காக மேற்கொள்கிறது. அவற்றையும் பகிரங்கமாக நான் வெளிப்படுத்தியுள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com