மத்திய ரிசா்வ் காவல் படை தோ்வை தமிழ் மொழியில் நடத்த வலியுறுத்தி, சென்னையில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சாா்பில், வரும் 17-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாணவரணிச் செயலாளா் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோா் கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் ரிசா்வ் காவல் படையினா் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கையில், கணினி தோ்வு ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. மேலும், ஹிந்தி பேசுபவா்களுக்கு மட்டுமான தோ்வாக இதனை கட்டமைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனை தி.மு.க., இளைஞா் அணி-மாணவா் அணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த பிரச்னை தொடா்பாக மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் கணினி தோ்வை நடத்துவதற்கு உடனடியாக மறுஅறிவிப்பு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, திமுக இளைஞரணி, மாணவரணி சாா்பில், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகில் திங்கள்கிழமை (ஏப்.17) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.